சுதந்திர தினத்தன்று , தேசிய கொடியை இறக்கி, கறுப்பு கொடியை ஏற்றிய யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகரா தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்
சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை இறக்கி , கறுப்பு கொடியை ஏற்றியமை தேசிய கொடியை அவமதித்த செயலாகும். அதனை செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன் , அதற்கு அனுமதித்த , பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசியர்கள் பதில் சொல்ல வேண்டும். அவர்களிடம் விளக்கம் கோர வேண்டும்.
நாட்டின் தேசிய கொடியை ஏற்க மறுப்பவர்கள் தேச துரோகிகளே அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்
No comments