வவுனியா, மகாறம்பைக்குள பகுதியில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தில் இருந்து தவறி வீழ்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அனுராதபுரம், நிக்கவரெட்டி பகுதியை சேர்ந்தசத்துரங்க ஹேரத் (வயது 30) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் அமைந்துள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறி திருத்தப்பணிகளை முன்னெடுத்துக் கொண்டிருந்த போதே தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்.
No comments