வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
கல்லூரியின் மைதானத்தில் அதிபர் ருஷிறா
குலசிங்கம் தலைமையில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில், பிரதம விருந்தினராக அமெரிக்காவில் இருந்து வருகை தந்த யாழ்ப்பாணக் கல்லூரியின் தர்மகர்த்தா சபையின் தலைவர் ஜோன் சிட்னர் கலந்து கொண்டு விளையாட்டு நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.
தொடர்ந்து கல்லூரியின் கேஸ்ரிங் ,பிறௌன் ,ஏப்ரகாம் ,கிச்கொக் ஆகிய நான்கு இல்ல மாணவர்களுக்கிடையில் மெய்வல்லுனர் போட்டிகளின் இறுதிப்போட்டி இடம்பெற்றது.
அதன் போது. சகோதர பாடசாலைகளின் வெளிக்கள நிகழ்வுகளும் மைதானத்தில் இடம்பெற்றது.
2025 ஆம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுனர் போட்டியின் வெற்றியாளராக ஏப்ரகாம் இல்லம் வெற்றிவாகை சூடியது தொடர்ந்து வெற்றிவாகை சூடிய மாணவர்களுக்கு சான்றிதழ்கள் கேடயங்கள் பதக்கங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
விளையாட்டு போட்டியில் கௌரவ விருந்தினராக வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் முன்னாள் ஜொனாதன் கெஸ்ட் (Jonathan guest) , தென்னிந்திய திருச்சபையின் பேராயர் கலாநிதி பத்மதயாளன் ,சகோதர பாடசாலை அதிபர்கள்,கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவர்கள்,பழைய மாணவர்கள் நலன்விரும்பிகள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி
Related Posts
ராஜாவின் மரகத விழாவில் மகுடம் சூடியது முனைக்காடு இராமகிருஸ்ணா அணி!
Unknown May 14, 2025
ஓய்வை அறிவித்தார் விராட் கோலி
Unknown May 12, 2025
IPL போட்டிகள் ஒத்திவைப்பு
Unknown May 09, 2025
Subscribe to:
Post Comments (Atom)