இணுவில் கந்தசுவாமி ஆலயத்தில் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு உலகப் பெருமஞ்சம் வீதியுலா நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தைப்பூச தின உலக பெருமஞ்ச வீதியுலாவின் போது, நாட்டின் பல பாகங்களில் இருந்தும் , வெளிநாடுகளில் இருந்தும் வருகை தந்த பெரும்பாலானவர்கள் மஞ்ச திருவிழாவில் கலந்து கொண்டனர்.
தைப்பூச தினத்தன்று காலை 5.30 மணிக்கு அபிஷேகங்கள் இடம்பெற்று விசேட பூஜை வழிபாடுகள் ஆரம்பமாகி, தொடர்ந்து காலை மருதனார்மடம் பல்லப்ப வைரவர் ஆலயத்தில் இருந்து பாற்குட பவனி வந்து முருக பெருமானுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது.
பாற்குட பவனியை தொடர்ந்து , ஆலயத்திற்கு சொந்தமான சங்குவேலியில் உள்ள வயலில் நெல் அறுவடை செய்து , அதனை எருது வண்டியில் ஆலயத்திற்கு பாரம்பரிய முறைப்படி எடுத்து வந்து, ஆலய முன்றலில் நெல் குத்தி , அரிசியாக்கி , அந்த அரிசியில் பொங்கல் நிகழ்வு நடைபெற்றது.
இவற்றினை தொடர்ந்து மாலை விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று , மாலை 6.30 மணிக்கு வசந்தமண்டப பூஜை இடம்பெற்று , ஆறுமுகசுவாமி , வள்ளி தெய்வானை சமேதரராய் , உலக பெருமஞ்சத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.
திருமஞ்சத்தில் முருகப்பெருமான் வீதியுலா வரும் வேளை வீதியில் பாரம்பரிய கலை கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்றன.
இம்முறை திருமஞ்சத்திற்கு வர்ண பூச்சு வேலைகள் நடைபெற்று புதுப்பொலிவுடன் வீதியுலா வந்தமை குறிப்பிடத்தக்கது.
உலக பெருமஞ்சத்தில் எழுந்தருளிய இணுவைக்கந்தன் - வீடியோ இணைப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments