அநுராதபுர பகுதியில் யாத்திரிகளை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று, இன்றைய தினம் சனிக்கிழமை தீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
எமது வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ள கீழுள்ள இணைப்புக்கு செல்லுங்கள்
https://chat.whatsapp.com/H2g8RmUpm8xDqiZJH11jfN
இந்த பேருந்து எம்பிலிப்பிட்டிய பிரதேசத்திலிருந்து அநுராதபுரம் பிரதேசத்திற்கு யாத்ரீகர்கள் குழுவுடன் சென்ற போது, பேருந்து தீப்பிடித்துள்ளது. அதன்போது பேருந்தில் இருந்த ஒருவர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அநுராதபுரம் நகர சபையின் தீயணைப்பு பிரிவு, அநுராதபுரம் பொலிஸ் மற்றும் உடமலுவ பொலிஸ் இணைந்து தீயை கட்டுப்படுத்தியுள்ளனர்.
தீப்பிடித்த பேருந்து முழுமையாக எரிந்து தீக்கிரையாகியுள்ளது. உடமலுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments