Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

அதிபர் ஒருவருக்கு 3 வருட சிறைத்தண்டனை


2015ஆம் ஆண்டில் ஐந்தாம் தரத்திற்காக மாணவர் ஒருவரை கம்பஹாவில் உள்ள பிரதான பாடசாலையில் அனுமதிக்கும் நோக்குடன், தனது பாடசாலையிலேயே மேற்படி மாணவனை சேர்த்துக் கொண்டதற்காக அதிபர் ஒருவருக்கு நீதிமன்றத்தால் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

விசாரணையின் போது மாகாண கல்வி பணிப்பாளரின் முறையான ஒப்புதல் இல்லாமல், பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைக்கு புறம்பாக, ஒரு பிரபலமான பாடசாலையில் சேர்க்கும் நோக்கத்துடன், குறித்த மாணவன் மேற்படி அதிபரின் பாடசாலையில் சேர்க்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் அரச சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு விடயங்களை தெரிவித்துள்ளார்.

நடுத்தர வர்க்க குழந்தைகளுக்கு இருக்கும் ஒரே வழியான புலமைப்பரிசில் பரீட்சை போன்றவற்றில் அவர்கள் சித்தியடைந்தாலும், பிரபல பாடசாலைகளுக்கு செல்லும் வாய்ப்பு இவ்வாறான செயற்பாடுகளால் அவர்களுக்கு இழக்கப்படுவதாகவும் நீதிமன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சமூகத்தில் ஏற்படும் பாதகமான தாக்கத்தையும், பாடசாலை அமைப்பில் இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்காக சமூகத்திற்கு ஒரு முன்மாதிரியாக அமையக்கூடிய வகையில் தண்டனையை வழங்குமாறும் நீதிமன்றில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இந்த காரணிகளை பரிசீலித்த , நீதிமன்றம்  அதிபருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.

மேலும், ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது, அதை அவர் செலுத்தத் தவறினால், அவருக்கு மேலும் 3 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

No comments