இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி படகு மற்றும் மீன்பிடி உபகரணங்கள் என்பன பருத்தித்துறை நீதிமன்ற வளாகத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை பகிரங்க ஏலம் மூலம் 5 இலட்த்து 60ஆயிரத்து 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை கடற்பரப்பில் வைத்து கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 29 ஆம் திகதி நான்கு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வல்வெட்டித்துறை பொலிசாரால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு வழக்கு விசாராணை மேற்கொள்ளப்பட்டு மீன்பிடி படகு மற்றும் மீன்பிடி உபகரணங்கள் அரசுடமையாக்கப்பட்டிருந்தன.
இவ்வாறு அரசுடமையாக்கப்பட்ட மீன்பிடி படகு 2 இலட்சத்து 12 ஆயிரம் ரூபாவிற்கும், மீன்பிடி வலைகள் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் ரூபாவிற்கும், இரண்டு வெளியிணைப்பு இயந்திரங்கள் 64 ஆயிரம் ரூபாவிற்கும், குளிரூட்டல் பெட்டி 50 ஆயிரம் ரூபாவிற்கும், இரண்டு ஜிபி எஸ் கருவிகள் 40 ஆயிரத்து 100 ரூபாவிற்கும், நங்கூரம் 8 ஆயிரம் ரூபாவிற்குமாக அனைத்து பொருட்களும் 5 இலட்சத்து 60 ஆயிரத்தை 100 ரூபாவிற்கு ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
No comments