Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

இந்த தொலைபேசி இலக்கங்களில் இருந்து அழைப்பு வந்தால் பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கவும்


டுபாயில் உள்ள  இலங்கை தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிக்கும் மோசடி குறித்து பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

டுபாயை தளமாகக் கொண்ட இந்த கடத்தல்காரர்கள், கப்பம் பெறும் நோக்குடன் இலங்கையில் உள்ள ஏனையவர்கள் பயன்படுத்தி வரும், தொலைபேசி எண்களைப் பயன்படுத்தி மோசடி செய்து பணம் பறிப்பது விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

ஒவ்வொரு நபருக்கும் அவர்கள் பயன்படுத்தும் தொலைபேசி எண்களின் ஊடாகவே தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ளும் வகையில் ஒரு தொழில்நுட்ப முறையைப் பயன்படுத்தி, அதன் ஊடாக அவர்களது தொலைபேசி நிறுவனம் மூலமாக அழைப்பு வந்தது என்பதை நம்ப வைப்பார்கள்.

பின்னர்  ஒரு லொட்டரியில் பரிசு வென்றதாகக் கூறி, அதைப் பெறுவதற்காக தொலைபேசி எண்ணுக்கு SMS மூலம் பெறப்பட்ட OTP எண்ணை வழங்குமாறு கேட்பார்கள்

பின்னர் மோசடி செய்பவர்கள் OTP எண்ணைப் பயன்படுத்தி தொலைபேசியின் அனைத்து விவரங்களையும் பெற்று, அந்த தொலைபேசி எண்ணுடன் தொடர்புடைய e-SIM கார்டைப் பெற்று, அதைப் பயன்படுத்தி பணம் பறித்து வருகின்றனர்.

இதுபோன்ற கடத்தலுக்கு பரவலாகப் பயன்படுத்தப்பட்ட 4 தொலைபேசி எண்களை பொலிஸர் தற்போது வெளியிட்டுள்ளனர்.

0769449126 , 0715649753, 0764132685 மற்றும் 0741497554 ஆகிய தொலைபேசி இலக்கங்களில் இருந்து அழைப்பு வந்தால் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்குத் தெரிவிக்குமாறு விசாரணை அதிகாரிகள் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

No comments