Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பத்திரிசியார் கல்லூரி 175ஆவது ஆண்டு விழா


யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் 175 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு விசேட நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்லூரியின் அதிபர் அருட்தந்தை திருமகன் தெரிவித்தார்.

 யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

 மேலும் தெரிவிக்கையில்,

கல்லூரியின் 175 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடைபவனி, சஞ்சிகை வெளியீடு, பழைய மாணவர்கள் இடையேயான காற்பந்து மற்றும் துடுப்பாட்டப் போட்டிகள், பாடசாலைகளுக்கு இடையிலான துடுப்பாட்டப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 கொண்டாட்ட நிகழ்வுகளை நடைபவனி மற்றும் கல்லூரி பரிசளிப்பு விழா என இரண்டு தினங்களையும் அண்மித்து இரண்டு கட்டங்களாக நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.

 கல்லூரியின் 175 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு முதல் நிகழ்வாக இடம்பெறும் நடைபவனியானது கல்லூரிக்கும் சமூகத்திற்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

 குறிப்பாக அண்மைக்காலமாக அதிகளவில் ஏற்படும் தொற்றா நோய்களை தடுத்தல் எனும் தொனிப்பொருளில் குறித்த விழிப்புணர்வு நடைபவனியை ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

 நடைபவனியானது எதிர்வரும் மார்ச் மாதம் 14ஆம் திகதி காலை 8 மணிக்கு கல்லூரியில் உள்ள சிற்றாலயத்தில் அமைந்துள்ள பத்திரிசியாரின் உருவச் சிலையிலிருந்து ஆரம்பமாகி சென் பற்றிக்ஸ் வீதியூடாக பிரதான வீதியை அடைந்து பிரதான வீதியூடாக பஸ்ரியன் சந்தியை அடைந்து அங்கிருந்து வைத்தியசாலை வீதி வழியாக கார்கில்ஸ் சந்தியை அடைந்து அங்கிருந்து மணிக்கூட்டு வீதியூடாக எமது கல்லூரியின் புகழ்பூத்த அதிபர்களில் ஒருவரான லோங்கினுடைய உருவச் சிலை அமைந்துள்ள யாழ் பொது நூலகத்தை அடைந்து அங்கு சிறிய நிகழ்வொன்று இடம்பெறவுள்ளது.

 குறிப்பாக லோங்கினுடைய உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து அங்கிருந்து பிரதான வீதியூடாக குறித்த நடைபவனியானது மீண்டும் கல்லூரியை வந்தடையவுள்ளதுடன் அங்கு கல்லூரியின் 175 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு விசேட சஞ்சிகை ஒன்றும் வெளியிடப்படவுள்ளது

இந்நிகழ்வுகளில் புலத்திலும் நிலத்திலும் வாழும் கல்லூரியின் பழைய மாணவர்கள் அனைவரையும் நிகழ்வுகளில் பங்கேற்று சிறப்பிக்க கல்லூரி நிர்வாகத்தால் அழைப்பு விடுக்கிறோம் என தெரிவித்தார்.

No comments