Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

சாவல்காட்டு மகாத்மா சனசமூகநிலையத்தின் 75 ஆவது


சாவல்கட்டு மகாத்மா சனசமூகநிலையத்தின் 75 ஆவது ஆண்டின் பவள விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகளை வட மாகாண ரீதியில் நடத்தவுள்ளதாக குறித்த நிகழ்வுகளின் ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.

எமது வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ள கீழுள்ள இணைப்புக்கு செல்லுங்கள் 

https://chat.whatsapp.com/H2g8RmUpm8xDqiZJH11jfN

நிகழ்வின் ஏற்பட்டுக்குழு இன்றையதினம் வெள்ளிக்கிழமை, யாழ். ஊடக அமையத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர்.

மேலும் தெரிவிக்கையில்,

சாவல்கட்டு மகாத்மா சனசமூகநிலையமானது கடந்த 1950 ஆம் ஆண்டு மக்களை ஒன்றிணைத்து தனது முதல் சமூக சேவையை ஆரம்பித்தது.

இதன் பின்னர் படிப்படியாக தனது கட்டமைப்புக்களை வளர்த்துக்கொண்ட குறித்த சனசமூக நிலையமனது விளையட்டுக்கழகம், முன்பள்ளி மற்றும் பொது மக்களின் கட்டமைப்பு உள்ளிட்ட பல கட்டமைப்புக்களை உருவாக்கி பல நூறு மக்களின் ஒத்துழைப்புடன் பெரும் பரிணாமம் பெற்று பக்களுக்காக பெரும் பங்காற்றியுள்ளது.

இவ்வாறான சமூக செயற்பாகளுடன் தற்போது 75 ஆவது ஆண்டை வரும் எதிர்வரும் 07ஆம் திகதி மிக பெரியளவில் கொண்ட ஏற்பாடுகள் செய்து வருகிறோம்.

அதில் ஒரு கட்டமாக தேசிய ரீதியில் பல விளையாட்டு நிகழ்வுகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், இன்றைய தினம் சனிக்கிழமை மாலை  6.00 மணிக்கு கரப்பந்தாட்ட போட்டியும், எதிர்வரும் 28ஆம் திகதி காலை 7 நீச்சல் போட்டியும், மறுநாள் 28ஆம் திகதி பிற்பகல் 3.00 மணிக்கு கயிறு இழுத்தல் நிகழும், எதிர்வரும் 1ஆம் திகதி மரதன்  ஓட்ட நிகழ்வு காலை 6.00 மணிக்கும், சைக்கிள் ஓட்டம் நிகழ்வுகள் காலை 7.30 மணிக்கும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை வலிகாமம் பிரதேச ரீதியில் உதைபந்தாட்ட நிகழ்வும்,  சிறுவர்களுக்கான  பல்வேறு நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.

இறுதி நிகழ்வுகள்  மார்ச் மாதம் 7 ஆம் திகதியன்று பல்வேறு உயரதிகாரிகள் கல்விப் புலம் சார்ந்தோர் பங்கேற்புடன் நடைபெற உள்ளது என தெரிவித்துள்ளனர். 

இதேவேளை நிகழ்வுகளில் பங்கேற்க விரும்புவோர் தமது பதிவுகளை த.ராஜ்குமார் - 0773933179, செ.டுபின்சன் - 0779509975, சி.செந்தூரன் -  0779459078 ஆகியோருடன் தொடர்புகொண்டு மேற்கொள்ளுமாறு கேட்டுள்ளனர்.


No comments