யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் சாராய விற்பனையில் ஈடுபட்ட பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாண புறநகர் பகுதியில் வீடொன்றில் பெண்ணொருவர் சாராய விற்பனையில் ஈடுபடுவதாக பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடைப்படையில் குறித்த வீட்டிற்கு விரைந்த பொலிஸார் பெண்ணை கைது செய்ததுடன், அவரிடம் இருந்து கால் போத்தல் சாரய போத்தல்களையும் மீட்டுள்ளனர்.
விசாரணைகளில் குறித்த பெண் மதுபான சாலைகள் மூடப்பட்டுள்ள நேரங்களில் சாராய போத்தல்களை அதிக விலைக்கு விற்பனை செய்து் வருவதாக தெரிய வந்துள்ளது.
குறித்த பெண்ணை பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
No comments