Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

அவயங்களை இழந்தோருக்கு மறுவாழ்வு


உங்கள் திறன்களை மேம்படுத்துங்கள். உங்கள் வாழ்க்கையை மாற்றுங்கள் என்ற தொனிப்பொருளில் யாழ் பல்கலைக் கழக பொறியியல் பீடத்தின் கீழ் முப்பரிமாண தொழில் நுட்பத்தினூடாக வடக்கு கிழக்கில் உள்ள அவயவங்களை இழந்த மக்களின் மறுவாழ்வை முன்னிறுத்தி விசேட திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. 

 கலிபோர்னியா பல்கலையின் ஓய்வு நிலை பேராசிரியர் காசி விஸ்வனாதன் செல்வகுமார் மற்றும் கனடா - இலங்கைக்கான வர்த்தக சபையின் இணைப்பாளர் குலா செல்லத்துரை ஆகியோர் இதை தெரிவித்துள்ளனர். 

யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

யாழ் பல்கலைக்கழக பொறியியல்பீடத்தின் center for prosthetics (cfp) மற்றும் இந்தியாவின் spark media இணைந்து மாற்றுத் திறனாளிகளின் வாழ்வை வலுப்படுத்தும் இந்த திட்டமாக இது முன்னெடுக்கப்பகின்றது.

யாழ் பல்கலை பொறியியல் பீடத்தின் தொழில் நுட்ப அனுசரணையூடாக கனேடிய அரசு மற்றும் கனேடிய வர்த்தக சம்மேளனம் ஆகியவற்றின் நிதிப் பங்களிப்பில் இந்த மறுவாழ்வு வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்த திட்டம் கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் மலேசிய நிறுவனம் ஒன்றினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது. 

 இந்நிலையில் குறித்த வரப்பிரசாதத்தை வன்னியில் உள்ள அவயவங்களை இழந்து நாளாந்தம் பல்வேறு அவமானங்களையும் அசௌகரியங்களையும் கண்டுவருவோர் பெற்றுக்கொள்ளும் வகையில் முதற்கட்டமாக முன்னெடுக்கப்படுகின்றது. 

இந்த முப்பரிமாண பொறிமுறையூடான அவயவங்களை பெற்றுக்கொள்ளும் பயனாளிகள் அதை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என்பது தொடர்பாக பயிற்சிப் பட்டறை ஒன்று இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் எதிர்வரும் மார்ச் மாதம் 5 ஆம் திகதிமுதல் 9 ஆம் திகதிவரை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிள்ளது. 

இதில் பங்கேற்க இலங்கையில் இருந்து 50 பேரை அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுத்துள்ளோம். 

இதேநேரம் இந்த அவயவங்கள் முப்பரிமாண பொறிமுறையூடாக தயாரிக்கப்படுகின்றது. 

ஆனாலும் இந்த தொழில் நுட்பம் இலங்கையில் இன்மையால் அதை இந்தியாவில் இருந்து முதற் கட்டமாக பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

 அதன் பின்னர் இதை யாழ் பல்கலை பொறியியல் பீடம் முழுமையாக மேற்கொள்ளும். இதே நேரம் இந்த திட்டமானது யுத்தத்தில் பாதிக்கப்படு அவயவங்களை இழந்தவர்களுக்கு மட்டுமல்லாது ஏனைய விபத்து மற்றும் நோய்களால் அவயவங்களை இழந்தவர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

 அந்தவகையில் அவயவங்களை இழந்தவர்களுக்கு அவர்களது சுய மரியாதையை மீண்டும் உருவாக்கல் மற்றும் அவர்களின் பொருளாதார ஈட்டலுக்கான வழியை உருவாக்கல் ஆகியவற்றை மையமாக கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த திட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தமக்கான அவயவங்களை பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன் 0742287850 என்னும் இலக்கத்துடன் தொடர்புகளை ஏற்படுத்தி பயன் பெற்றுக்கொள்ளுமாறும் முடியும் என தெரிவித்தனர்.

No comments