முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சஞ்சய சிறிவர்தன கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்தனகல்ல பகுதியில் அவருக்குச் சொந்தமான காணியில் ஒரு T-56 துப்பாக்கி, இரண்டு மெகசின்கள், 130 தோட்டாக்கள் மற்றும் 12-போர துப்பாக்கிகள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் சில T-56 துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை மறைத்து வைத்துள்ளதாக அவர் வழங்கிய தகவலுக்கு அமைய விசாரணை நடத்தவும் பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
No comments