திஸ்ஸமகாராமவில் இருந்து புறப்பட்ட தேரர்களின் பாத யாத்திரை குழுவினர் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளனர்.
அம்பாந்தோட்டை திஸ்ஸமகாராம முதல் நயினாதீவு நாகதீப விகாரை வரையில் 5 நாடுகளின் தேரர்கள் இணைந்து பாதயாத்திரை முன்னெடுத்துள்ளனர்.
இதில் பங்கேற்றுள்ள 50 தேரர்கள் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துக்கு வருகைதந்தனர்.
தேரர்களை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வரவேற்றார்.
தாய்லாந்து, மியான்மார், லாகோஸ், இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த தேரர்களே இந்தப் பாதயாத்திரையில் இணைந்துள்ளனர்.
No comments