33,000 வோட் உயர் மின்னழுத்த மின்மாற்றி இணைப்பு அமைப்பிலிருந்து தரையில் இணைக்கப்பட்ட செப்பு கம்பியை வெட்டிய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஹாலிஎல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டாரவளை வீதியில் விநாயகர் கோவில் அருகே மின்மாற்றியின் செப்பு கம்பியை அறுத்துக் கொண்டிருந்தபோது, சந்தேக நபர் இன்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை வேளை ஹாலிஎல பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கஹவத்தை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
மேலும், குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்
No comments