அனலைதீவு பிரதேச மருத்துவமனையின் நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் சார்பில் பல கோரிக்கைகள் வடமாகாண ஆளுநரிடம் முன்வைக்கப்பட்டன.
அனலைதீவு பிரதேச மருத்துவமனையில், மத்திய சுகாதார அமைச்சின் 6.3 மில்லியன் ரூபா நிதியில், கடற்படையின் பங்களிப்புடன் மறுசீரமைக்கப்பட்ட மருத்துவர் விடுதி திறப்பு விழாவும், விரிவுபடுத்தப்பட்ட சுகாதார சேவை அறிமுக நிகழ்வும் அனலைதீவு பிரதேச மருத்துவமனை வளாகத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
அதன் போது, மருத்துவமனையின் நோயாளர் நலன்புரிச் சங்கத்தினரால்,
நோயாளர் காவுவண்டி, படகுச்சேவை, பிரதேசத்தினுள் செயற்படும் இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்து அடிக்கடி பழுதடைகின்றமையால் புதிய பேருந்து, இறங்குதுறை புனரமைப்பு, வீதிகளின் புனரமைப்பு ஆகிய கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.
அத்துடன் பிரதேச மருத்துவமனையின் மருத்துவ அதிகாரிக்கு ஊர் மக்கள் சார்பில் நன்றியும் பாராட்டும் தெரிவித்திருந்தனர்.
No comments