Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Wednesday, May 21

Pages

Breaking News

யாழில் வீடொன்றில் திருடி மதுபானம் வாங்கிய குற்றத்தில் பெண் உள்ளிட்ட நால்வர் கைது


யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் 95ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் ஏ.ரி.எம் அட்டைகளை களவாடிய குற்றச்சாட்டில் பெண்ணொருவர் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் 04ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது. 

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் பணம் மற்றும் ஏ.ரி.எம் அட்டைகள் களவாடப்பட்டமை தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. 

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த போலீசார் , வீட்டின் பாதுகாப்பு கமராக்களை சோதனை செய்ததன் அடிப்படையில் வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண்ணை சந்தேகத்தில் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் , அவரே திருடியதாகவும் , திருட்டுக்கு மூன்று ஆண்கள் துணை போயிருந்த நிலையில் அவர்களையும் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்டவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் , திருடிய பணத்தில் 20 ஆயிரம் ரூபாய்க்கு மதுபானம் வாங்கி அருந்தியமையும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளனது. 

விசாரணைகளின் பின்னர் அவர்களை யாழ் . நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய போது , அவர்களை 04ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.