Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழ். யூடியூப்பரின் செயல்; பெண்களின் தனித்துவம் மற்றும் பாதுகாப்புக்கு எதிரானவை


இலங்கையின் பெண்களின் பாதுகாப்புக்காக செயலாற்றும் Unity for Women Safety Sri Lanka (UWSSL) என்ற அமைப்பாக, சமீபத்தில் ஒரு YouTube Content Creator இனால் இடம்பெற்ற அவமதிப்பு சம்பவத்தை உறுதியுடன் கண்டிக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் அவ் அமைப்பினரால் வெளியிடப்பட்ட அறிக்கையில்,

உதவிக்காக அணுகிய குடும்பத்திற்கு உதவுவதற்குப் பதிலாக, அக்குடும்பத்திலிருந்த இளம்பெண், தனது தனிமனித உரிமையையும், மரியாதையையும் காக்க விரும்பி, காணொளியில் இடம்பெற மறுத்ததைக் காரணமாக கொண்டு, அவரை அவமதிக்கும் விதத்தில் வலியுறுத்தி, அருவருப்பான வார்த்தைகளை பயன்படுத்தினார்.

அந்த YouTuber கூறிய சில வார்த்தைகளில் சில:

"இவ என்ன ஐஸ்வர்யா இவைய காட்டித்தான் எண்ட video வ ஓட பண்ணோணுமா? வீடியோக்கு வரமாட்டியா?"

"யாரையும் லவ் பண்றியா?"

"18 வயதாகியும் இன்னும் பால்குடி மறக்கவில்லையா?"

"இப்படி நடித்தால் எனக்கு கோவம் வரும் "

"அம்மாட கஷ்டம் தெரியாத பிள்ளை "

இவ்வாறான நடத்தைகள் எவ்விதத்திலும் ஏற்க முடியாதவை என்றும், பெண்களின் மரியாதை, தனித்துவம் மற்றும் பாதுகாப்புக்கு எதிரானவை என்றும் அறிவிக்கின்றோம்.

No comments