Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

ஜே.வி.பி. செய்த கொலைகளை மறைப்பதற்கு இடமளிக்கக் கூடாது


பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை முன்னிலைப்படுத்தி கடந்த காலங்களில் ஜே.வி.பி. செய்த கொலைகளை மறைப்பதற்கு இடமளிக்கக் கூடாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா வலியுறுத்தியுள்ளார்.

கம்பஹா பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஏதேனும் குற்றங்கள் தொடர்பில் ஆணைக்குழுக்களை அமைத்து விசாரணைகளை முன்னெடுப்பது வழமையானதொரு செயற்பாடாகும். ஆனால் பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை மிகப் பழையதாகும். 1994ஆம் ஆண்டு சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அரசாங்கத்தில் ஜே.வி.பி. அமைச்சரவையில் அங்கத்துவம் வகித்தது.

2005 இல் மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவதற்கு இவர்களே பிரதானமாக செயற்பட்டனர். அந்த காலத்தில் ஏன் இந்த அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை என்பது சந்தேகத்துக்குரியது. 

தற்போதைய காலத்தின் தேவை ஜே.வி.பி.னரால் செய்யப்பட்ட கொலைகள் தொடர்பில் ஆராய்வதற்கான ஆணைக்குழுவொன்றை நியமிப்பதாகும்.


பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை முன்னிலைப்படுத்தி கடந்த காலங்களில் ஜே.வி.பி. செய்த கொலைகளை மறைப்பதற்கு இடமளிக்கக் கூடாது. பட்டலந்தையில் குற்றமிழைத்தோருக்கு தண்டனை வழங்கப்படும் அதேவேளை, ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்த ஜே.வி.பி.யினருக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும். என்றார்

No comments