Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Sunday, May 18

Pages

Breaking News

50 இலட்சம் ரூபாய் ஒப்பந்தத்தில் நடத்தப்பட்ட கொலை


மாத்தறை – தேவேந்திரமுனை பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவம் 50 இலட்சம் ரூபாய் ஒப்பந்தத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

மேலும், இதற்காக இரண்டு துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 

இதேவேளை, கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண் உட்பட 4 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை தடுப்பு காவலில் வைத்து விசாரிப்பதற்கு மாத்தறை பதில் நீதவான் அனுமதி வழங்கினார். 

சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்தக் கொலை 50 இலட்சம் ரூபாய் ஒப்பந்தத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவந்துள்ளது.

போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் இரு தரப்பினருக்கு இடையில் நிலவிவந்த மோதலின் விளைவாக இந்த கொலைகள் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்