கடந்த வருடம் ஐந்தாம் மாதம் 30 ஆம் திகதி களனிவெளி பெருந்தோட்ட யாக்கத்திற்கு உட்பட்ட பீட்ரூ தோட்ட தொழிற்சாலையில் அத்துமீறி நுழைந்ததாக குற்றச்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு எதிராக பெருந்தோட்ட நிறுவனத்தினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்றைய தினம் திங்கட்கிழமை நுவரெலியா நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது வழக்கு எதிர்வரும் வழக்கில் சந்தேகநபர்களாக ஜீவன் தொண்டமான் உட்பட 10 சந்தேக நபர்களையும் தலா 5 லட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்தது.
அதனை தொடர்ந்து வழக்கினை எதிர்வரும் ஜூன் மாதம் 09ஆம் திகதிக்கு மன்று தவணையிட்டது
No comments