Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில் வேலை தேடும் இளையோருக்கு வாய்ப்பு


யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் மாவட்ட தொழில் நிலையமானது 40 இற்கு மேற்பட்ட தொழில் நிறுவனங்களை ஒருங்கிணைத்து எதிர்வரும் சனிக்கிழமை காலை 8.30 மணிமுதல் மதியம் 1.30 மணிவரை மாபெரும் தொழிற்சந்தை நிகழ்வினை மாவட்ட செயலக வளாகத்தில் நடாத்தவுள்ளது.

இத்தொழிற்சந்தை நிகழ்வில் கலந்துகொள்வதற்காக தனியார் உற்பத்தி நிறுவனங்கள், சந்தைப்படுத்தல் நிறுவனங்கள். கணக்கியல்துறை, ஹோட்டல்கள், காப்புறுதித்துறை, ஆடைத் தொழிற்சாலை, பாதுகாப்புச்சேவை, தாதியர் வேலைவாய்ப்பு, கணனித்துறை, தொழிற்பயிற்சி நெறிகள், ஹோட்டல் முகாமைத்துவம், சுயதொழில் ஊக்குவிப்பு நிறுவனங்கள் போன்ற நிறுவனங்கள் வருகைதரவுள்ளதுடன் தங்கள் நிறுவனத்தில் காணப்படும் 500இற்கு மேற்பட்ட வெற்றிடங்களுக்காக அன்றையதினமே நேர்முகத்தேர்வினை நடாத்தவுள்ளன. 

மேற்படி தொழிற்சந்தை நிகழ்வில் தொழில்தேடும் இளையோர்கள் தங்களது தகமைகளை நிரூபிக்கக்கூடிய ஆவணங்களுடன் கலந்துகொள்வதன் மூலமாக தமக்குப் பொருத்தமான தொழில் ஒன்றினைப் பெற்றுக்கொள்ளலாம். 

எனவே, தொழில் வாய்ப்பொன்றினை பெற்றுக்கொள்ளக்கூடிய இவ்வாய்ப்பினைப் பயன்டுத்தி பயனடையுமாறு யாழ். மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

மேலதிக தகவல்கள் மற்றும் தொடர்புகளுக்கு 0212219359 என்ற தொலைபேசியூடாக தொடர்புகொள்ளுமாறு  மேலும் தெரிவித்தார்.

No comments