Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழ் . கலைஞர்களின் பங்கேற்புடன் தென்னிந்தியாவில் உருவாகும் திரைப்படம்


ஃபைண்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் வினோத் ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகும் ரோம்காம் திரைப்படம் “மைனர்”. இப்படத்தின் பூஜை, இன்றைய தினம் இடம்பெற்றது. 

Arabi production  &  Viyan ventures மற்றும் May Day Productions சார்பில் இணைந்து தயாரிக்கும் இந்த படம் , இன்றைய இளைய தலைமுறை காதல் எப்படி இருக்கிறது என்பது தான் இப்படத்தின் மையம். 

பள்ளி பருவத்தில் பிரிந்த காதலைத் தேடி ஒரு இளைஞன் பயணமாகிறான். அந்த காதல் மீண்டும் சேர்ந்ததா? இருவரும் இணைந்தார்களா என்பது தான் இப்படத்தின் கதை. 

இப்படத்தில் இலங்கை ராப் பாடகர் வாகீசன் நாயகனாக நடிக்க, பிக்பாஸ் புகழ் ஜனனி நாயகியாக நடிக்கிறார். சார்லி, செண்ட்ராயன், ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். 

இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் சென்னை மற்றும் பாண்டிச்சேரி பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. 

வினோத் ராஜேந்திரன் எழுதி இயக்கும் இந்த திரைப்படத்திற்கு ஒளிப்பபதிவினை யாழ்ப்பாணத்தை சேர்ந்த றெஜி செல்வராசா மேற்கொள்ள, சூர்ய பிரசாத் R இசையமைக்கவுள்ளார். 





No comments