காலி கோட்டை சுவரிலிருந்து தவறி விழுந்த பல்கலைக்கழக மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.
ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன், ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பயிலும் தனது நண்பர்களுடன் காலி கோட்டையைப் பார்வையிடச் சென்ற போதே கோட்டை சுவரிலிருந்து கீழே வீழ்ந்துள்ளார்.
இதனையடுத்து, படுகாயமடைந்த இளைஞன், பொலிஸ் அதிகாரிகளால் கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
No comments