Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நல்லூரில் பாத்தீனியத்தை அழிக்க நடவடிக்கை


யாழ்ப்பாணம், நல்லூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள பாடசாலைகளில் பாத்தீனிய செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

பிரதேச மட்ட சிறுவர் கண்காணிப்புகுழு கூட்டம்  நல்லூர் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்றது. 

இதன்போது பாடசாலை இடைவிலகல் மற்றும் ஒழுங்கீனங்கள், சிறுவர்கள் பாடசாலைகளில் சமூகத்தில் எதிர்கொள்ளும் பல்வேறுபட்ட பிரச்சினைகள் , சிறுவர்கள் தொடர்பாக கிராம மட்ட அமைப்புக்களின் முக்கியத்துவம்  தொடர்பாகவும், பாடசாலையில் புதிய மாணவர்களை இணைக்கும் போது ஏற்படும் நடைமுறை சிக்கல்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. 

அதேவேளை பாடசாலை மட்டத்தில், கிராம மட்டத்தில் பாதீனியம் அதிகளவு காணப்படுவதனால் அவற்றை கட்டுப்படுத்துவதற்கான பொறிமுறைகள் தொடர்பாகவும்  கலந்துரையாடப்பட்டது.

இக் கலந்துரையாடலில் நல்லூர் மற்றும் யாழ்ப்பாண சுகாதார வைத்திய அதிகாரிகள், சுகாதார பிரிவு உத்தியோகத்தர்கள், வலயக்கல்வி பணிப்பாளர், பாடசாலை அதிபர்கள்,நன்னடத்தை உத்தியோகத்தர், சமுர்த்தி முகாமையாளர், கிராம நிர்வாக உத்தியோகத்தர்,  கிராம அலுவலர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், சிறுவர் இல்ல முகாமையாளர்கள், சிறுவர்  பிரிவு உத்தியோகத்தர்கள் மற்றும் சிறுவர்  சார் சமூக நலன் விரும்பிகள் ஆகியோர் பங்குபற்றினார்கள்.

No comments