Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தேர்தல்கள் ஆணைக்குழு பாரபட்சமாக செயற்படுவதாக ஜீவன் எம்.பி குற்றச்சாட்டு


தேர்தல்கள் ஆணைக்குழு சுயாதீனமாகவும், ஜனநாயக ரீதியாகவும் இயங்க வேண்டிய ஒரு அமைப்பு என்றும், இருந்தும் தேர்தல் ஆணைக்குழுவின் பக்கசார்பான செயற்பாடுகள் வருத்தத்திற்குரியது என பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். 

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடனான கலந்துரையாடல் நேற்றைய தினம் திங்கட்கிழமை தேர்தல் செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றிருந்தது. 

இக் கலந்துரையாடலில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கன்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,  

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இவ்வாறான கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதில் எந்த நன்மையும் இல்லை.

வேட்புமனு தாக்கல் செய்தபோது சில சபைகளின் வேட்புமனுக்கல் நிராகரிக்கப்பட்டன. அச்சபைகளை நீதிமன்றத்தின் மூலம் மீள பெற்றுள்ளோம். சில சபைகள் தொடர்பாக தேர்தல் ஆணையாளரிடம் முறையிட்டுள்ளோம். 

மஸ்கெலியா உள்ளூராட்சி சபை ஏன் நிராகரிக்கப்பட்டது என்று தேர்தல் ஆணையாளரிடம் வினவியபோதும், அங்கீகரிக்கப்பட்ட நபர் வேட்புமனு தாக்கல் செய்யாமல் வேறு நபர் தாக்கல் செய்யப்பட்டமையினால் நிராகரிக்கபட்டது என தெரிவிக்கப்பட்டது. 

இவ்விடயம் தொடர்பாக எங்களுடைய கட்சியிலே வேட்புமனு கையளிக்க அங்கீகரிக்கப்பட்ட நபருக்கு சுகயீனம் கராணமாக அவரின் மருத்துவ சான்றிதழ் சமர்பித்து அவருக்கு பதிலாக நியமித்திருந்த மாற்று நபருக்கு சமாதான நீதவானின் சான்றிதல் வழங்கியிருந்தும் எங்களுடைய கட்சியின் மஸ்கெலியா பிரதேச சபையின் வேட்புமனுவினை நிராகரித்து இருந்தனர். இது தொடர்பாக தேர்தல்கள் ஆணையாளரிடம் வினவியபோது அவர் அதற்கு எவ்வித பதிலும் வழங்கவில்லை. 

 ஜனாதிபதி அநுர குமார திசாநயக்க தேர்தல் பிரசாரங்களின் போது உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெறும் தேசிய மக்கள் சக்தியைச் சார்ந்த உறுப்பினர்களுக்கே நிதி ஓதுக்கீடு மேற்கொள்வேன் என்றும் மாற்று கட்சி உறுப்பினர்கள் தொடர்பாக யோசிப்போம் என்றும் கூறி வருகின்றார். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. 

 கண்டி தலதா மாளிகையில் பௌத்த மதம் சார்ந்து நடைபெறும் சமய வழிபாட்டை வரவேற்கின்றோம்.

தேர்தலை முன்னிட்டு கல்வி ரீதியிலான செயற்பாடுகள், பொருளாதார ரீதியான செயற்பாடுகள், காணி உரிமை தொடர்பிலான செயற்பாடுகள் ஆகியவற்றைத் தடைசெய்யும் தேர்தல்கள் ஆணைக்குழு சமய செயற்பாடுகளுக்கு மட்டும் தடை விதிக்கவில்லை என மேலும் தெரிவித்தார்.

No comments