Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழ். இளையோரின் தொழில் தகைமைகளை வலுப்படுத்த விசேட பயிற்சி


சர்வதேச தொழில் சந்தையில் காணப்படும் போட்டி நிலைக்கு ஏற்ப யாழ்ப்பாணத்திலுள்ள இளைஞர் யுவதிகளின் தொழில் தகைமைகளை வலுப்படுத்தி சான்றிதழ் வழங்கும் நோக்கில் இலங்கையின் தொழில் பயிற்சி தொழில் வாய்ப்பு வழங்கும் நிறுவனமான ISD international (pvt) Ltd நிறுவனம் புதிய நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்க களம் இறங்கியுள்ளதாக அதன் நிர்வாக அதிகாரிகள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர். 

மேலும் தெரிவிக்கையில், 

இலங்கையில் ஏற்கனவே பயிற்சி பெற்று இளைஞர்களின் தொழில் நிபுணத்தவ தரத்தை உறுதி செய்யும் நிறுவனங்கள் இரண்டு இருக்கின்றன. ஆனாலும் அவற்றினூடாக பயிற்சி பெற்று வெளியேறும் இளைஞர்களிடம் அந்த தொழிலின் நிபுணத்துவம் உலக சந்தையின் கேள்விக்கேற்ப போதுமானதாக இல்லாத நிலை காணப்படுகின்றது.

இதனால் உலக நாடகளுக்கு இலங்கையில் இருந்து செல்லும் தொழிலாளர்கள் அந்நாடுகள் எதிர்பார்க்கும் திறமைகளை வெளிக்கொணரும் அற்றல் குறைந்தவர்களாக இருக்கும் சூழல் உருவாகின்றது. 

இதனால் உலக நாடுகள் இலங்கையின் தொழிலாளர்களை தமது நாடுகளுக்கு அழைப்பதை நிறுத்தும் நிலையும் காணப்படுகின்றது.

இந்நிலையில்தான் குறித்த தொழில் பயிற்சி தொழில் வாய்ப்பு வழங்கும் நிறுவனமான ISD international (pvt) Ltd நிறுவனம் இலவசமாக உலக நாடுகள் எதிர்பார்க்கும் கேள்விக்கேற்ற தொழில் வல்லுநர்களை அடையாளப்படுத்தி பயிற்சிகளை இலவசமாக கொடுப்பதற்கான முயற்சியை எடுத்துள்ளது.

ஆனாலும் இந்த நிறுவனம் ஒரு வெளிநாட்டு தொழில் வாய்ப்ப முகவர் நிறுவனமாக ஒருபோதும் செயற்படாது. 

ஆனால் இளைஞரகளின் தொழில் தரத்தை வலுப்படுத்தும் உந்துசக்தியாகவே இருக்கும்.

அதனடிப்படையில் எமது இந்த திட்டத்தின் கீழ் இளைஞர்களை தொழில் தேர்ச்சி உடையவர்களாக, அதற்கான சான்றிதழ்களை வழங்கல், அதற்கான சலுகைகளை பெற்றுக்கொடுத்தல், திட்டவரைபுகளை உருவாக்க உதவிசெய்தல் போற்ற முயற்சிகளை முன்னெடுக்கவுள்ளது.

குறிப்பாக தற்போது உலக நாடுகளில் அதிக கேள்வியாக உள்ள Welding, Hospitality, Construction, Heavy Equipment operation, Healthcare, Germent Industry, Pipe Fitting, Cleaning Services  போன்ற தொழில் துறைகளில் இலங்கையின் இளைஞர்களை தேர்ச்சியாளர்களாக்கும் பயிற்சிகளை வழங்கி அதாற்கான சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த திட்டடத்தில் யாழ்ப்பாணத்திலுள்ள இளைஞர்கள் தம்மை ஈடுபடுத்தி நன்மைகளை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். 

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 19ஆம் மற்றும் 20ஆம் திகதிகளில் இளைஞர்கள் யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டல் நிகழ்வு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது .

No comments