ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அநுராதபுரம் ஸ்ரீ மகா போதிக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டார்,
ஸ்ரீ மகா போதியில் வழிபாட்டில் ஈடுப்பட்ட பிறகு, இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிறுவப்பட்ட மஹவ – அநுராதபுரம் தொலைபேசி சமிக்ஞை அமைப்பு உத்தியோகபூர்வமாக இந்தியப் பிரதமரால் திறந்து வைக்கப்படவுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட மஹவ – ஓமந்தை ரயில் பாதையும் இன்று காலை திறக்கப்படவுள்ளது.
No comments