Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

அதிகரிக்கும் வெப்பம்; உயிரிழப்புக்கள் கூட ஏற்படலாம்


மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக வெப்பமான வானிலை காணப்படுவதனால் சிறுவர்களுக்கு இதய நோய்கள், மயக்கம், உயிரிழப்புக்கள் கூட ஏற்பட வாய்ப்பு உண்டு என மாவட்ட பிராந்திய சுகாதாரசேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் இரா.முரளீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

மட்டக்களப்பு  மாவட்டத்தில் தற்போது அதிக வெப்பமான வானிலை காணப்படுவதனால் பொதுமக்கள் மேலதிகமான உடற்பயிற்சிகள், விளையாட்டு நிகழ்வுகளிலோ, உரியமுறையில் ஒழுங்குபடுத்தப்படாத களியாட்ட நிகழ்வுகளை தவிர்த்துக் கொள்வதோடு போதுமான அளவு குடிநீர் அருந்த வேண்டும்.

அதிக வெப்ப தாக்கத்திலிருந்து பொதுமக்கள் பாதுகாத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுப்பதோடு தேவையற்ற விதத்தில்  நண்பகல் வேலைகளில் நடமாடுவதை குறைத்துக் கொள்ள வேண்டும்.

இதன் மூலம் ஏற்படுகின்ற உயிரிழப்புக்கள் இதன் பாதிப்புக்களில் இருந்து மக்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.  

கூடுதலாக சிறுவர்கள் அதிக அக்கறையுடன் செயல்பட வேண்டும். இவ்வாறான காலகட்டங்களில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பற்றுவதை தவிர்க்க வேண்டும்.

வயதானவர்கள் உடலை வருத்துகின்ற செயற்பாடுகளை தவிர்க்க வேண்டும். 

எனவே பொதுமக்கள்  தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலம் இதன் பாதிப்புக்களில் இருந்து தவித்துக் கொள்ள முடியும் என்றார். 

No comments