வீடு புகுந்து திருடிய குற்றச்சாட்டில் மூன்று பெண்கள் மொரட்டுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மார்ச் 24ஆம் திகதி மொரட்டுவ பொலிஸ் பிரிவில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த மூன்று பெண்கள் வீட்டில் இருந்த 63 ஆயிரத்து 900 ரூபா பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சந்தேக நபர்களான மூன்று பெண்களையும் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மொரட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments