சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் எனக்கு அரசியல் அதிகாரமும் கிடைக்கும் வேளை எனது சமூக சேவைகளை முழு மூச்சுடன் முன்னெடுப்பேன் என தமிழ் மக்கள் கூட்டணியின் மான் சின்னத்தில் கோப்பாய் பிரதேச சபை தேர்தலில் ஜே/ 281 மற்றும் ஜே 285 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை உள்ளடக்கிய பத்தமேனி இரண்டாம் வட்டாரத்தில் போட்டியிடும் தம்பித்துரை பிரசாத் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பிலையே அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேச சபையில் , தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் பத்தமேனி வட்டாரத்தில் மான் சின்னத்தில் போட்டியிடுகிறேன்.
சமூக செயற்பாட்டாளராக செயற்பட்டு வருகிறேன். எவ்வித அரசியல் அதிகாரங்களும் இன்றியே எனது சேவைகளை முன்னெடுத்தேன்.
தற்போது தேர்தல் அரசியலில் பிரவேசித்துள்ளேன். எனக்கு வாக்களித்து எனக்கான அரசியல் அதிகாரங்களை எமது மக்கள் தந்தால் , மக்களுக்காக முழு மூச்சுடன் அரசியலுடன் எனது சமூக சேவை பணிகளையும் முன்னெடுப்பேன்.
எமது கட்சியின் பிரதான கோஷமான " தூய கரங்கள் , தூய நகரம் " என்பதற்கு இணங்க ஊழலற்ற வகையில் எமது பிரதேசத்தை எமது பிரதேச இளையோர்களுடன் கை கோர்த்து கட்டியொழுப்புவோம் என குறித்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments