Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

இந்திய மீனவர்களால் வடக்கு கிழக்கு தமிழர்களின் பொருளாதாரம் அழிக்கப்படுகிறது


இந்திய மீனவர்களாலையே வடக்கு கிழக்கு தமிழர்களின் பொருளாதாரம் பெரியளவில் அழிக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

நெடுந்தீவில் வைத்து நேற்றைய தினம் புதன்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

இந்திய மீனவர்களின் வருகையால் இதுவரையில் ஈழத்தமிழர்களின் பொருளாதாரம் பாதிக்கு மேல் அழிந்து விட்டது.  தமது பொருளாதாரத்தை பெருக்கிக்கொள்ள முடியாத நிலையிலும் இயல்பு வாழ்க்கையை இழந்த நிலையிலும் ஈழத்தமிழர்கள் இருக்கிறார்கள். 

குறிப்பாக யுத்தம் முடிவடைந்த 15 ஆண்டுகளில் வடக்கு கிழக்கு தமிழர்களின் பொருளாதாரம் பெரியளவில் அழிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான அடிப்படைக் காரணமே இந்திய மீனவர்களின் வருகைதான்.

அவர்களுடைய மீன்பிடிப் பொறிமுறைகள் எமது பகுதி மக்களின் மீன்பிடி வலைகளை அறுத்தல் மற்றும் அவர்களது உற்பத்திகளை முடக்குதல் ஆகியவை காரணமாக எமது மீனவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

குறிப்பாக புதிய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் இந்திய மீனவர்களின் வருகையை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் மேலும் அவர்களது வாழ்வாதாரங்களை அளிக்கும் செயற்பாடுகளை அனுமதிக்கின்றது.

இது தொடர்பாக நெடுந்தீவு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல மீனவர்கள் என்னிடம் முறைப்பாடுகளைத் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, முன்பெல்லாம் வாரத்தில் ஓரிரு நாட்களில் மட்டுமே இந்திய மீனவர்கள் வருவார்கள் இடைப்பட்ட நாட்களில் எமது வாழ்வாதாரத்தை தேடிக்கொள்ளும் வாய்ப்பிருக்கிறது. இப்பொழுது அதற்கு கூட வழியில்லாமல் உணவுக்காக கூட நாம் கஷ்டப்படுகிறோம் என நெடுந்தீவு மீனவர்கள் முறையிட்டுள்ளனர்.  

எனவே இந்த விடயம் தொடர்பாக இந்தியத்தரப்பிடம் எமது மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றுவதற்கான வழிமுறைகள் குறித்து தீர்வு காண்பதற்கான அழுத்தம்  கொடுத்து அவற்றை நடைமுறைப்படுத்தவுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.

No comments