தனது வழிகாட்டலில் வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேச சபை தேர்தலில் சுயேச்சை குழு - 2 இல் கைக்கோடாரி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக உரும்பிராய் தெற்கு பகுதிகளில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை தொழிலதிபர் ஞானப்பிரகாசம் சுலக்சன் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
அதேவேளை உரும்பிராய் பகுதிகளில் மக்கள் சந்திப்புக்களிலும் ஈடுபட்டார். அதன் போது தனது வேட்பாளர்களுக்கு வாக்குகளை அளித்து அவர்களுக்கான அரசியல் உரிமைகளை பெற்றுக்கொடுப்பதன் ஊடாக உங்கள் கிராமங்களை அபிவிருத்தி செய்ய தம்மால் முடியும் என தெரிவித்தார்.
No comments