79 மில்லியன் ரூபா பெறுமதியான 'குஷ்' போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற வௌிநாட்டு பிரஜை ஒருவர் இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைய வெளியேறும் முனையத்தில் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
தாய்லாந்தைச் சேர்ந்த 21 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த போதைப்பொருள் தாய்லாந்தில் கொள்வனவு செய்து, மலேசியாவின் கோலாலம்பூருக்குச் சென்று, அங்கிருந்து மலேசிய எயார் லைன்ஸ் விமானம் MH-179 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போதே சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பயணப் பையில் இனிப்புகளுடன் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 7 கிலோகிராம் 910 கிராம் 'குஷ்' போதைப்பொருளே இவ்வாறு சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், கைதான சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளும் மேலதிக விசாரணை நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
No comments