அருந்ததி நிறுவனத்தின் ஏற்பாட்டில் “மாற்று மோதிரம் எம்பவர் ஹர்” எனும் முதன்மையான மணப்பெண் ஃபேஷன் ஷோ மற்றும் மகளிர் உச்சி மாநாடு சென்னையில் எதிர்வரும் ஜூன் மாதம் 20ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இதைன முன்னிட்டு தெற்காசிய மணப்பெண் மற்றும் ஃபேஷன் துறைக்கான ஒரு முக்கிய நிகழ்வாக, அருந்ததி நிறுவனம் தனது முதல் சர்வேதச பத்திரிகையாளர் சந்திப்பை சென்னையில் நடத்தியது.
குறித்த ஊடக சந்திப்பில்
சென்னை வர்த்தக மையத்தில் "மாற்று மோதிரம்: எம்பவர்ஹெர் - பிரீமியர் மணப்பெண் ஃபேஷன் ஷோ மற்றும் மகளிர் உச்சி மாநாட்டை” எதிர்வரும் ஜூன் மாதம் 20ஆம் திகதி நடத்த திட்டமிட்டுள்ளோம்.
மணப்பெண் நேர்த்தியைக் கொண்டாடுதல், பெண் தொழில் முனைவேருக்கு களத்தை ஏற்படுத்தி கொடுத்தல் மற்றும் கலாச்சார ஒத்துழைப்புகளை மேம்படுத்துதல் போன்ற தொலைநோக்கு பார்வையை இந்த உச்சி மாநாடு
கொண்டுள்ளது.
விசேடமாக தெற்காசிய மணப்பெண் மரபுகள் மற்றும் சமகால பின்பற்றுதல்களை எடுத்துக்காட்டும் வகையில், இந்தியா, இலங்கை, மலேசியா மற்றும் இன்னும்
பல நாடுகளில் உள்ள நிபுணர்களை ஒன்றிணைப்பதே இந்த உச்சி மாநாட்டின் நோக்கம்
கொண்டுள்ளது.
விசேடமாக தெற்காசிய மணப்பெண் மரபுகள் மற்றும் சமகால பின்பற்றுதல்களை எடுத்துக்காட்டும் வகையில், இந்தியா, இலங்கை, மலேசியா மற்றும் இன்னும்
பல நாடுகளில் உள்ள நிபுணர்களை ஒன்றிணைப்பதே இந்த உச்சி மாநாட்டின் நோக்கம்
இந்த நிகழ்வில் பல விசேட பிரிவுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மணப்பெண் டிரெண்டிங் அலங்காரம் மற்றும் தொழில்முனைவோர் குறித்த தொழில்துறை ஆளுமைகளின் நுண்ணறிவு குறித்த பகிர்தல், நேரடி அழகுப் போட்டிகளில் ஒப்பனை கலை மற்றும் ஸ்டைலிங்கில் திறமையை வெளிப்படுத்துதல், சர்வதேச மணப்பெண் காட்சிப்படுத்தல்களின் போது பல்வேறு கலாச்சாரங்களில் இருந்து மணப்பெண் ஃபேஷனை வழங்குதல், பெண் தொழில் முனைவோர் உச்சி மாநாட்டில் அழகு மற்றும் ஃபேஷன்
தொழில்களில் பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் வணிக வாய்ப்புகளில் கவனம் செலுத்துதல் போன்ற அம்சங்கைள இந்த “மாற்று மோதிரம்: எம்பவர்ஹர்” நிகழ்வு உள்ளடக்கியுள்ளது.
நிகழ்வு குறித்து, அருந்ததியின் நிர்வாக இயக்குநர் எஸ். கலாமோகன், தனது மகிழ்ச்சி மற்றும் ஆர்வத்தை தெரிவித்தார்.
இந்த உச்சிமாநாடு ஒரு ஃபேஷன் ஷோ என்பைத தாண்டி இது பெண்களுக்கு அதிகாரம் மற்றும் வாய்ப்பளிக்கவும், கலாச்சார பாரம்பரியத்தை கொண்டாடவும், திருமணத் துறையில் சர்வதேச ஒத்துழைப்புகளை வளர்க்கவும் ஒரு தளமாக அமையும் என மேலும் தெரிவித்தார்.
இந்த பத்திரிகையாளர் சந்திப்பில், நேச்சுரல்ஸ் சலூனின் இணை நிறுவனர் திரு. சி.கே. குமாரேவல், தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் பிரபல ஒப்பனை கலைஞர்கள் மற்றும் கல்வியாளர்
செல்வி. பொன்னி, உலகளாவிய ஒப்பனை கல்வியாளர் மற்றும் நடிகர் கண்ணன் ராஜமாணிக்கம் சர்வதேச சேலை டிராபிஸ்ட் மற்றும் கல்வியாளர் திவ்யன் ஜெயரூபன் (மலேசியா) சலூன் நாயகரா இயக்குனர் கயல்விழி ஜெயபிரகாஷ்( இலங்கை) தினகரன் பத்திரிகையின் ஆசிரியர் செந்தில்வேலவர் போன்ற
பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
செல்வி. பொன்னி, உலகளாவிய ஒப்பனை கல்வியாளர் மற்றும் நடிகர் கண்ணன் ராஜமாணிக்கம் சர்வதேச சேலை டிராபிஸ்ட் மற்றும் கல்வியாளர் திவ்யன் ஜெயரூபன் (மலேசியா) சலூன் நாயகரா இயக்குனர் கயல்விழி ஜெயபிரகாஷ்( இலங்கை) தினகரன் பத்திரிகையின் ஆசிரியர் செந்தில்வேலவர் போன்ற
பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வு குறித்த மேலதிக விபரங்கைள அறிந்து கொள்ள
www.mmbridalshow.com எனும் இணையத்தளத்திற்கு சென்று பார்வையிடலாம். அல்லது சமூக ஊடக
தளங்களில் அருந்ததி நிறுவனத்தின் உத்தியோகப் பூர்வ பக்கங்களை பின் தொடர்வதன் ஊடாகவும் அறிந்து கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு அருந்ததி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எஸ். கலாமோகன் அவர்களை +91 7708 414 524 (இந்தியா) | அல்லது +94 76 975 9197 (இலங்கை) எனும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments