யுத்த வெற்றியின் 16வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நாளை திங்கட்கிழமை நடைபெறும் "தேசிய வெற்றி கொண்டாட்டத்தில்" ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பங்கேற்பார் என்று இராணுவ வீரர்கள் சேவை அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்வு, ஜனாதிபதியின் தலைமையில் நடைபெறும் என்று அதன் தலைவர் ஓய்வுபெற்ற பிரிகேடியர் செனரத் கோஹோன தெரிவித்தார்.
யுத்த வெற்றியின் 16வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் உள்ள இராணு வீரர்கள் நினைவுச்சின்னத்திற்கு முன்பாக மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை நடைபெறவுள்ளது.
No comments