இந்தியாவிலிருந்து 10 ஆயிரம் மெற்றிக்தொன் உப்பு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 20 ஆயிரம் மெற்றிக் தொன் உப்புக்கான முதல் தொகுதி அடுத்த வாரம் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படவுள்ளதாக இலங்கை உப்பு நிறுவனத்தின் தலைவர் டி.நந்தனதிலகா தெரிவித்துள்ளார்.
தேசிய உப்பு நிறுவனம் இறக்குமதி செய்த உப்பு கையிருப்பில் ஒரு பகுதியை வாங்கி மக்களுக்காக உப்பு சந்தைக்கு வெளியிட இலங்கை உப்பு நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் லங்கா உப்பு நிறுவனம் இந்தியாவிலிருந்து 10,000 மெற்றிக்தொன் உப்பையும் இறக்குமதி செய்துள்ளது.
மேலும், நேற்றுமுன்தினம் லங்கா உப்பு நிறுவனம் 400 கிராம் கொண்ட ஒரு இலட்சம் உப்பு பைக்கெற்றுக்களை லங்கா சதோசவுக்கு வழங்கியதாகவும் டி.நந்தனதிலகா தெரிவித்தார்.
No comments