கத்தோலிக்கத் திருச்சபையின் 267 ஆவது பரிசுத்த பாப்பரசர் 14-ஆம் லியோ அவர்களின் பணியேற்பு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் புனித பீற்றர்ஸ் பெருங்கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
இலங்கை நேரப்படி நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமான பணியேற்பு விழா விசேட திருப்பலியில் உலகின் பல பகுதிகளிலிருந்து இலட்சக்கணக்கான மக்கள் நடந்தது.
அதிகாலை முதலே மக்கள் வத்திக்கான வளாகத்தில் கூடியதுடன் திருத்தந்தை மக்கள் நடுவே வலம் வந்து திருப்பயணிகளை வாழ்த்தி மகிழ்ந்தார். விழா நாயகரான புதிய திருத்தந்தையைக் கண்ட மக்கள் ஆரவாரம் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மக்கள் சந்திப்பு நிறைவுற்றதும் திருவழிபாட்டுச் சடங்குகள் வத்திக்கான் பெருங்கோயில் வளாகத்தில் நடைபெற்றது. திருப்பலிக்கு முன்பதாக இறைமக்களால் செபமாலை செபிக்கப்பட்டது. அதனையடுத்து திருத்தந்தையால் விசேட திருப்பலி நிறைவேற்றப்பட்டது. திருத்தந்தையின் இந்த பணியேற்பு விழாவில் 150 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டதுடன் அவர்களுடன் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.
No comments