Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பேருந்து விபத்து உயிரிழப்பு 21ஆக உயர்வு - காயமடைந்தவர்களை கொழும்பு அழைத்து செல்ல ஹெலிகள் தயார் நிலையில்


கொத்மலை ரம்பொடை – கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தநிலையில், உயிரிழந்த 21 பேரின் உடல்களும் கொத்மலை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

படுகாயமடைந்தவர்களை மேலதிக சிகிச்சைக்காக கொழும்புக்கு அழைத்து வர 2 ஹெலிகொப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, அமைச்சின் செயலாளரின் அறிவுறுத்தலின் பேரில், இரத்மலானை விமானப்படை தளத்தில் இந்த 2 ஹெலிகொப்டர்களையும் விமானப்படை தயார் நிலையில் வைத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நடவடிக்ைக இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 412 ரக ஹெலிகொப்டர்கள் இரண்டு ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.











No comments