வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேச சபைக்குட்பட்ட அச்சுவேலி பத்தமேனிப் பகுதியில் மான் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடும் தமிழ் மக்கள் கூட்டணியினர் இன்றைய தினம் சனிக்கிழமை பிரசார நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.
தமிழ் மக்கள் கூட்டணியின் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் பத்தமேனிப்பகுதியில் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அதன் போது பத்தமேனி இரண்டாம் வட்டாரத்தில் போட்டியிடும் தம்பித்துரை பிரசாத்தை ஆதரித்து பிரச்சார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது குறித்த பகுதிகளிலுள்ள வீடுகளுக்குச் சென்று துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
No comments