Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Sunday, July 13

Pages

Breaking News

10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி கைது


திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவர், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

17 வயது சிறுவன் ஒருவன் சாரதி அனுமதி பத்திரம் இன்றி மோட்டார் சைக்கிள் ஓட்டியமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருக்க 10,000 ரூபாய் இலஞ்சமாக கோரியதாக அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தொடர்புடைய தரப்பினர் இலஞ்ச ஆணைக்குழுவுக்கு தகவல் தெரிவித்ததையடுத்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

சந்தேக நபர் திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், அடுத்த மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.