நெடுந்தீவில் நேற்று முன்தினம் சனிக்கிழமை மின்தடை ஏற்பட்டுள்ளமையால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர்.
நெடுந்தீவு பகுதிக்கு மின் பிறப்பாக்கிகள் ஊடாகவே மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. அந்நிலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை மின்பிறப்பாக்கி திடீரென பழுதடைந்தமையால் , மின்சாரம் தடைப்பட்டது.
அந்நிலையில், உடனடியாக திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்டு, நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முதல் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளது.
நெடுந்தீவுக்கு தேசிய மின் இணைப்பு கட்டமைப்பின் ஊடாக மின்சாரம் வழங்கப்படாது, இரண்டு மின் பிறப்பாக்கிகள் ஊடாகவே மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.
No comments