யாழ்ப்பாணத்தில் கிணற்றில் தவறி விழுந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
காரைநகரை சேர்ந்த திருச்செந்தில் சரோஜாதேவி (வயது 58) எனும் பெண்ணே உயிரிழந்துள்ளார்.
பாதுகாப்பு கட்டுக்கள் இல்லாத கிணற்றில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வாளியினால் நீர் அள்ளி நீராடிக்கொண்டிருந்த வேளை , கால் வழுக்கி கிணற்றினுள் விழுந்துள்ளார்.
அவரை வீட்டார் மீட்டு ,வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
No comments