கொழும்பு மாநகரசபையில் தேசிய மக்கள் சக்தியே ஆட்சியமைக்கும். இது உறுதி என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்ததாவது,
மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைப்பதற்கு நாம் தயார் இல்லை. மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் தற்போது ஒன்றிணைந்துள்ளனர்.
ஆனால், அதைப்பற்றி எமக்குக் கவலையில்லை. மக்கள் வழங்கியுள்ள ஆணையின் பிரகாரம் 267 சபைகளிலும் நாம் ஆட்சி அமைப்போம்.
தேசிய மக்கள் சக்தி வேட்பாளரே கொழும்பு மேயர் என்பதை குறித்து வைத்துக்கொள்ளுங்கள் என மேலும் தெரிவித்தார்.
No comments