Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Saturday, May 17

Pages

Breaking News

அரசியல் அங்கீகாரத்துடன் எனது உதவி திட்டங்கள் தொடரும்


தனது வழிகாட்டலில் வேலணை மற்றும் வலி.கிழக்கு பிரதேச சபைகளில் போட்டியிட்ட சுயேச்சை குழுக்கள் இரண்டு சபைகளிலும் தலா ஒரு ஆசனத்தினை பெற்றுள்ளது. எமது சுயேச்சை குழுக்களுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என தொழிலதிபர் ஞானப்பிரகாசம் சுலக்சன் தெரிவித்துள்ளார். 

ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

செய்தி குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

உள்ளூராட்சி சபை தேர்தலில், யாழ் . மாநகர சபை , வேலணை மற்றும் வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) ஆகிய சபைகளுக்கு நாம் சுயேச்சை குழுவாக போட்டியிட வேட்பு மனுக்களை தாக்கல் செய்தோம். 

அதில் துரதிஷ்ட வசமாக யாழ் . மாநகர சபைக்கான வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. அதற்கு எதிராக உச்ச நீதிமன்றம் சென்று இருந்த போதிலும் எம் சட்ட போராட்டம் தோல்வியடைந்தது. 

ஆனாலும், எனது வழிகாட்டலில் வேலணை மற்றும் கோப்பாய் சபைகளில் களமிறங்கிய சுயேச்சை குழு இரண்டு சபைகளிலும் தலா ஒரு  ஆசனத்தினை பெற்றுள்ளன. எம் சுயேட்சை குழுவிற்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறன் 

இனிவரும் காலங்களில் எனது அபிவிருத்தி திட்டங்கள் , வாழ்வாதார உதவி திட்டங்கள் என்பன குறித்த இரு சபைகளிலும் அரசியல் அங்கீகாரத்துடன் மிக சிறப்பாக முன்னெடுத்து செல்வேன் என அம்மக்களுக்கு உறுதி அளிக்கிறேன் என அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.