Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு சமாதி கட்டப்படும் அபாயம்


உள்ளூராட்சி மன்றங்கள் வடக்கு கிழக்கில் தேசிய மக்கள் சக்தியிடம் செல்லுமாயின் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு சமாதி கட்டப்படும் அபாயம் இருப்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக மையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகச் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், 

"வடக்கு மாகாணத்தில் ஆயிரக்கணக்கான காணிகளை அபகரிப்பதற்கான வர்த்தமானி வெளியிட்டப்பட்டு இருக்கின்றமை தொடர்பான தகவல்களை ஊடகங்கள் வெளிப்படுத்தி இருக்கின்றன.

குறிப்பாக உரிமை கோரப்படாத காணிக்ளை சவீகரிப்பதற்கான காலக்கெடுவும் விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான விடயங்களில் அரசியல் தலைமைகள் என்பதற்கு அப்பால் தென்னிலங்கையில் இருக்கின்ற அரச உயர் அதிகாரிகள் மற்றும் அரச திணைக்களங்கள், ஒரு நிகழ்ச்சி நிரலுடன் செயற்பட்டு வருகின்றமையை கடந்த காலங்களில் நாம் அனுபவ ரீதியாக உணர்ந்து கொண்டிருக்கின்றோம்.

குறிப்பாக சொல்ல வேண்டுமாக இருந்தால், கடந்த ஆட்சிக் காலத்தில் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் வனவளத் திணைக்களம், வனஜீராசிகள் திணைக்களம் மற்றும் தொல்லியல் திணைக்களம் போன்றவற்றினால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. 

இவ்வாறாக தென்னிலங்கையின் உயர் அதிகாரிகளினால், சுற்று நிருபங்கள், சட்டங்கள் போன்றவற்றின் பெயரால், தொடர்ச்சியாக சாக்குப் போக்குகள் தெரிவிக்கப்பட்டு வந்தன. 

இருந்தாலும் அங்கே இருக்கக்கூடிய அரச உயரதிகாரிகள் அதிகாரிகள் காணிகளை விடுவிப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய அலுவலக நடவடிக்கைகளை சீராக முன்னெடுக்காமல் திட்டமிட்ட காலதாமதத்தினை மேற்கொண்டு வந்திருந்தனர். 

அவர்கள் சரியாக செயற்பட்டிருந்தால் கடந்த ஆட்சிக் காலத்திலேயே ஆயிரக்கணக்கான காணிகள் விடுவிக்கப்பட்டிருக்கும்

மாற்றத்தினை எதிர்பார்த்து எமது மக்களினால் தெரிவு செய்யப்பட்டவர்கள்கூட ஏமாற்றம் அளிக்கும் வகையிலேயே செயற்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக இந்த காணி அபகரிக்கரிப்பு தொடர்பான செய்தியை வெளியே கொண்டு வந்த ஊடகவியலாளரை அச்சுறுத்தும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவனின் முகப் புத்தக பதிவு அமைந்திருந்தததை அவதானிக்க கூடியதாக இருந்தது.

அதேபோன்று ஊடக விவாதத்தில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், வர்த்தமாணியின் உண்மை தன்மையை நிரூபிக்குமாறு சிறுபிள்ளைத்தனமாக கருத்து தெரிவித்திருக்கின்றார். 

இவற்றை பாரக்கும்போது, எமது மக்களுக்கு எதிரான செயற்பாடுகளில் எமது மக்களினால் தெரிவு செய்யப்பட்டவர்கள் ஒத்துழைப்பு வழங்குகின்றார்கள் என்பது வெளிப்படுத்தப்படுகின்றது.

ஆக, அரசியல் அபிலாசைகளுக்கா போராடிய இனம், இந்த மண்ணிலே இப்போது ஒரு ஆபத்தான சூழலை எதிர்கொண்டிருக்கின்றது. 

இந்த இடத்திலே எமது பிரதேசங்களில் இருக்கின்ற எமது அரச அதிகாரிகளிடம் உரிமையுடன் விநயமான வேண்டுகோளை முன்வைக்கின்றோம்.

தயவு செய்து, உங்களுடைய தொழிசார் கடமைகள், தொழில்சார் கடப்பாடுகள், பதவி உயர்வுகள் போன்றவற்றுக்கு அப்பால், சமூக சிந்தனையோடு உங்களின் செயற்பாடுகள் அமைய வேண்டும். நீங்களும் இந்த மண்ணிலேதான் வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள். உங்கள் பிள்ளைகளும் இந்த மண்ணிலேதான் வாழ வேண்டும். 

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்பார்கள். இந்த மண்ணிலே எமது தனித்துவங்களும் அடையாளங்களும் பாதுகாக்கப்பட்டாலதான் எதிர்காலத்திலும் நாம் கௌரமாக வாழ முடியும்.

எனவே, எமது இருப்பினையும் அடையாளங்களையும் பாதிக்கும் வகையிலான சுற்றுநிரூபங்கள் அறிவுறுத்தல்கள் போன்றவை உங்களுக்கு கிடைக்குமாயின் அவை தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும். 

அல்லது எமது மக்கள் சார்ந்த செயற்பாட்டாளர்களின் கவனத்திற்கு அவற்றை கொண்டு வருவதன் மூலம், எமது மக்களை பாதுகாப்பதற்கான உங்களின் தார்மீக கடப்பாட்டினை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம் என தெரிவித்தார்.

No comments