முறையான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்களை (உணவு தானம்) இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, முறையான அறிவுறுத்தல்களுக்குப் பிறகு மேலும் 17 தன்சல்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக அதன் செயலாளர் சமில் முத்துகுட தெரிவித்தார்.
வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நேற்று நாடு முழுவதும் பல தன்சல்கள் (உணவு தானம்) ஏற்பாடு செய்யப்பட்டன, மேலும் அனைத்து தன்சல்களும் பொது சுகாதார பரிசோதகர்களால் மேற்பார்வையிடப்பட்டன.
பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் கருத்து வௌியிடுகையில், இன்று நடைபெறும் தன்சல்கள் தொடர்பிலும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
No comments