யாழில். தனிமையில் வாழ்ந்து வந்த முதியவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிங்கராஜா செபமாலை முத்து (வயது 74) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுளளார்.
உரும்பிராய் பகுதியில் உள்ள வீடொன்றினை பராமரிக்கும் முகமாக முதியவர் அந்த வீட்டில் தங்கியிருந்துள்ளார்.
அந்நிலையில் , கடந்த சில தினங்களாக குடும்பத்தினருடன் தொடர்பு இல்லாததால் , குடும்பத்தினர் அவரை தேடி சென்ற வேளை, உயிரிழந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.
அது தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
சடலம் உருக்குலைந்து காணப்படுவதால் , முதியவர் இறந்து சில தினங்கள் ஆகலாம் எனவும் , உடற்கூற்று பரிசோதனையின் பின்னரே இறப்புக்கான காரணம் தெரிய வரும் என தெரிவித்த கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments