Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை சிலர் தங்களின் குறுகிய அரசியல் நலன்களுக்காக பயன்படுத்துகின்றனர் - ஈ.பி.டி.பி குற்றச்சாட்டு


முள்ளிவாய்க்கால் அவலம் எதிர்காலத்திற்கான படிப்பினையாக   அமைய வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் பன்னீர்செல்வம் ஸ்ரீகாந் தெரிவித்துள்ளார். 

யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

முள்ளிவாய்க்கால் அவலம் நினைவு கூரப்பட்டு வருகின்றது. 2009 ஆண்டு இதே காலப் பகுதியில் இடம்பெற்ற முள்ளிவாய்கால் அவலம் காரணமாக ஆயிரக்கணக்கான எமது மக்கள் உயிரிழந்திருந்தனர். அவ்வாறு உயிரிழந்தவர்களை நினைவுகூருவதும் அவர்களுக்கான பிரார்த்னைகளை முன்னனெடுப்பதும் யாராலும் விமர்சிக்கப்பட முடியாதது. 

அதேபோன்று அந்த பேரவலம் தொடர்பாக அடுத்த சந்ததிக்கும் கடத்தப்பட வேண்டும் என்பதற்காக முள்ளிவாய்க்கால் கஞ்சி பல்வேறு இடங்களிலும் வழங்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறான நினைவேந்தல் நிகழ்வுகள், எமது இனத்தின் எதிர்காலத்திற்கான படிப்பினைகளாக அமைய வேண்டும். 

இவ்வாறான அவலங்கள் எவ்வாறு இடம்பெற்றன? இந்த அவலத்தை தடுப்பதற்கான முயற்சிகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டன? முள்ளிவாய்க்கால் பேரவலத்தை எம்மால் தடுத்து நிறுத்தியிருக்க முடியாதா? போன்ற கேள்விகளுக்கு சுயவிமர்சன அடிப்படையில், பதில்களை கண்டறிந்து அவற்றையும் எமது அடுத்த சந்திக்கு கடத்துவதன் மூலம்,  எதிர்காலத்தில் எமது மக்கள் இந்த மண்ணில் கௌரவமாக வாழ்வதற்கான சூழலை உறுதிப்படுத்த முடியும்.

ஆனால், முள்ளிவாய்க்கால் அவலம் போன்ற நிகழ்வுகள், சில தரப்புக்களினால் தங்களின் குறுகிய அரசயல் நலன்களுக்கும் சுய விளம்பரத்திற்கும் பயன்படுத்தப்படுவது வேதனையான விடயம். இதனை மக்கள் புரிந்து கொண்டு இவ்வாறான நிகழ்வுகளை அறிவுசார்ந்து சிந்தித்து புத்திசாதுர்யமாக கையாள வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் என மேலும் தெரிவித்துள்ளார்

No comments