திருமணமாகி இரண்டு வாரத்தில் பெண்ணொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்
யாழ்ப்பாணம் வரணி பகுதியை சேர்ந்த 19 வயதுடைய பெண்ணொருவரே நேற்றைய தினம் சனிக்கிழமை தனது வீட்டில் உயிரை மாய்த்துள்ளார்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணுக்கு இரு வாரங்களுக்கு முன்பே திருமணம் நடைபெற்றதாகவும் ,சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக கொடிகாம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments